கோசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோசர் என்பவர் பண்டைக்காலத் தென்னிந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள். இவர்கள் தொன்மையான மறக் குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் துளு நாட்டிலும், கொங்கணத்திலும், கொங்கு நாட்டிலும் அதிகாரம் பெற்றிருந்ததோடு தமிழ் நாட்டின் வேறு பல பகுதிகளிலும் இவர்கள் சிற்றரசர்களாக இருந்திருக்கின்றனர். இவர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறார்கள்.
இவர்களைப் பாடிய புலவர்கள், இவர்களுக்குப் பல சிறப்பு அடை மொழிகளைக் கொடுத்துள்ளார்கள். அவற்றுள், முது கோசர், இளம் கோசர், நான்மொழிக் கோசர், வாய்மொழிக் கோசர், செம்மற் கோசர், நீள்மொழிக் கோசர், ஒன்றுமொழிக் கோசர் போன்றவை அடங்குகின்றன. இவற்றிலிருந்து கோசர்கள் வாய்மை தவறாதவர்கள் என்றும், பல மொழிகளை அறிந்தவர்கள் என்பதும் விளங்குவதாகச் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
்