கோவணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோவணம் என்பது இடைக்கு கீழ் அணியும் ஒரே துண்டுத் துணியால் ஆன ஆடையாகும். பொதுவாக, ஆண்கள் மட்டுமே இதை உள்ளாடையாக அணிகிறார்கள். கோவணத் துணி என்று தனியாக கடைகளில் விற்கப்படுவதில்லை. துண்டுகளோ பழைய வேட்டிகளில் இருந்து கிழிக்கப்பட்ட துண்டுத் துணிகளோ கோவணங்களாகப் பயன்படுகின்றன. கோவணத்தை இடையில் இறுக்கிக் கட்ட அரைஞாண் கயிறு உதவுகிறது.
[தொகு] கோவணத்தின் பயன்பாடு
தற்போது உள்ள இளைய தலைமுறையில் கோவணம் அணியும் போக்கு மிகவும் குறைந்து வருகிறது. கடும் வெயில், வயலில் வேலை செய்வோர் வெறும் கோவணத்துடன் வேலை செய்வதுண்டு. எனினும், பொது அவையில் வெறும் கோவணத்துடன் தோன்றுவது கண்ணியமானதாகக் கருதப்படுவதில்லை. உள்ளாடையாக கோவணம் அணிவது தற்காலத்தில் நாகரிகமாகவும் கருதப்படுவதில்லை. ஆயத்த உள்ளாடைகள் வந்து விட்ட பிறகும் வறுமை, பழக்கம் காரணமாகவோ எளிமை கருதியோ சிலர் கோவணம் அணிகிறார்கள். சில சாதுக்கள், சாமியார்கள் கோவணம் மட்டுமே அணிந்து திரிவது குறிப்பிடத்தக்கது. முருகக் கடவுளும் ஆண்டியாக இருந்த போது கோவணம் அணிந்திருந்ததாக சித்தரிக்கப்படுவதுண்டு.