க. குணராசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (பி. ஜனவரி 25, 1941) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். நாவல்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
பொருளடக்கம் |
[தொகு] பிறப்பும் கல்வியும்
இவர் கந்தையா அன்னம்மா தம்பதிகளின் எட்டாவது குழதையாக வண்ணார்பண்ணையில் பிறந்தார். யாழ். இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியைப் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றார்.
[தொகு] இவருடைய ஆக்கங்கள்
[தொகு] தொடர் கதை
ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த 'கிடுகு வேலி' என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
[தொகு] திரைப்படம்
இவர் எழுதிய 'வாடைக் காற்று' நாவல் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு, தரமான படைப்பு எனப் பேசப்பட்டது.
[தொகு] நாவல்கள் மற்றும் குறுநாவல்கள்
- நந்திக்கடல்
- சித்திரா பௌர்ணமி
- ஆச்சி பயணம் போகிறாள்
- முற்றத்து ஒற்றைப் பனை
- வாடைக்காற்று
- காட்டாறு
- இரவின் முடிவு
- ஜன்ம பூமி
- கந்தவேள் கோட்டம்
- கடற்கோட்டை
[தொகு] சிறுவர் நாவல்கள்
- பூதத்தீவுப் புதிர்கள்
- ஆறுகால்மடம்
[தொகு] வரலாற்று நூல்கள்
- யாழ்ப்பாண அரச பரம்பரை
- நல்லை நகர் நூல்
[தொகு] ஆய்வு நூல்கள்
- ஈழத்துச் சிறுகதை வரலாறு
[தொகு] தொகுப்புக்கள்
- மல்லிகைச் சிறுகதைகள் - 1
- மல்லிகைச் சிறுகதைகள் - 2
- சுதந்திரன் சிறுகதைகள்
- மறுமலர்ச்சிச் சிறுகதைகள்
- ஈழகேசரிச் சிறுகதைகள்
- முனியப்பதாசன் கதைகள்
- ஆயிரமாயிரம் ஆண்டுகள்