க. சிவலிங்கராசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
யாழ் பல்கலைக்கழகத்து தமிழ்த்துறை பேராசிரியர் க. சிவலிங்கராசா (பி:கரவெட்டி, யாழ்ப்பாணம்), பல ஆய்வு நூல்களை எழுதி உள்ளார். இவர் பண்டிதர் கே. வீரகத்தி, பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் ஆகியோரிடம் பயின்றவர். ஈழத்து நாட்டார் வழக்குகள், மற்றும் கல்விப் பாரம்பரியங்கள் தொடர்பான வேர்களைத் தேடும் ஆய்வாளர்கள் வரிசையில் தனித்துவம் பெற்று நிற்பவர். 2005ஆம் ஆண்டுக்கான சம்பந்தர்விருது இவருக்கு வழங்கப்பட்டது.
[தொகு] எழுதிய நூல்கள்
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி - ஆசிரியர் எஸ். சிவலிங்கராஜா, சரஸ்வதி சிவலிங்கராஜா
- ஈழத்துத் தமிழ் உரைமரபு - எஸ். சிவலிங்கராஜா
- யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள்