க. நா. சுப்பிரமணியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
க.நா.சுப்பிரமணியம் (K.N.Subramaniam), க.நா.சு என்றும் அழைக்கப்படுகிறார். தமிழின் மிகச் சிறந்த விமர்சகர்களில் ஒருவர், க.நா.சு. மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் இவர். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தவர்.