சல்வார்-கமீஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சல்வார்-கமீஸ் என்பது, சல்வார், கமீஸ் என்னும் இரு பகுதிகளாலான பெண்கள் அணியும் தைக்கப்பட்ட ஒரு உடையாகும். பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம் போன்ற தெற்காசியாவிலுள்ள பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் விரும்பி அணியும் உடையாக இது உள்ளது. சல்வார், நீளமான ஒரு காற்சட்டை ஆகும், கமீஸ் என்பது, முழந்தாள்களுக்குக் கீழ்வரை நீண்டிருக்கும் ஒரு வகை மேற்சட்டையாகும். இவ்விரண்டுமே பல்வேறு வடிவங்களிலும், பாணிகளிலும் தைக்கப்படுகின்றன. இவற்றைவிட பெரும்பாலான சமயங்களில், துப்பட்டா எனப்படும் நீளமான சால்வையும் அணியப்படுவது உண்டு.
சல்வாரின் மேல் கால்பகுதி அகலம் கூடியதாக மிகவும் தளர்வாகக் காணப்பட, அடிப்பகுதி ஒடுங்கியதாக இருக்கும். இந்த அடிப்பகுதி சுருக்கு வைத்துத் தைக்கப்பட்டதாகவோ அல்லது நாடாக்களுடன் கூடியனவாகவோ இருக்கும். சல்வார் தளர்வாக இல்லாமல் ஓரளவு காலோடு ஒட்டியபடி இருப்பதும் உண்டு. இந்த அமைப்புடன் கூடிய சல்வார்-கமீசை, சுடிதார் என அழைப்பர்.
[தொகு] வரலாறு
சல்வார்-கமீஸ் மத்திய ஆசியப் பகுதியில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகிறது.