சாத்தஞ்சாத்தன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏனாதி சாத்தஞ்சாத்தன் என அழைக்கப்பட்ட இவன் சாத்தன் கணபதியின் தம்பியாவான்.ஏனாதி என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தவனும் ஆவான்.வேள்விக்குடிச் செப்பேடுகளில் தமிழ்ப் பகுதிகளினைப் பற்றிப் பாடியவனான இவன் புலமை மிக்கவனாகவும், படைத் தலைவனாகவும் இருந்தான்.பாண்டிய மன்னர்களின் வரலாறுகளினைச் செப்பேடுகளில் பாடியவன் இவனே என்ற பெருமையினையும் உடையவன்.