பேச்சு:சிற்றினப்பொருளியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிற்றினப்பொருளியல் என்றால் என்ன? நுண்பொருளியலும், சிற்றினப்பொருளியலும் ஒன்றா? Mayooranathan 18:06, 20 மே 2006 (UTC)
ஆம் ஒன்றுதான் மயுரனாதன் micro என்பதனை பல இடங்களில் பலவாறாக தமிழில் மொழி பெயர்துள்ளனர்.நுண்ணிணப்பொருளியல்,சிறுநோக்குபொருளியல் என்றும் சில புத்தகத்தில் காணக்கிடைக்கின்றது.--kalanithe
- அப்படியானால், கட்டுரையில் இதுபற்றிக் குறிப்பிடுவது நல்லது. தலைப்பு சிற்றினப்பொருளியல் என்று இருக்கக் கட்டுரையில் அச்சொல் ஓரிடத்திலும் பயன்படுத்தப்படவில்லை. Mayooranathan 16:58, 21 மே 2006 (UTC)
சிற்றினப் பொருளியல் என்னும் சொல்லாட்சி சரியாக இருப்பதாக நான் நினைக்கவில்லை. நுண், நுண்ணின என்பதும் சரியாகப் படவில்லை. குறும் பொருளியல் சரியாகப் படுகின்றது. சிற்றளவுப் பொருளியல், சிற்றமைப்புப் பொருளியல் என்பது போல ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள். எனக்கு குறும் பொருளியல் என்பது சரியாக இருக்கும் என தோன்றுகிறது.--C.R.Selvakumar 17:18, 5 ஜூலை 2006 (UTC)செல்வா