சி. சிவஞானசுந்தரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சி. சிவஞானசுந்தரம் | |
---|---|
சிரித்திரன் சுந்தர்
|
|
பிறப்பு | கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | மார்ச் 3,1996 யாழ்ப்பாணம், இலங்கை |
பணி | பத்திரிகையாளர், பதிப்பாளர், கேலிச்சித்திர ஓவியர், எழுத்தாளர் |
சி. சிவஞானசுந்தரம் (சுந்தர், இ. மார்ச் 3, 1996) சுமார் 45 வருடங்களாக இலங்கையில் கேலிச்சித்திரத்துறையில் தனது ஆளுமையைச் செலுத்தியவர். பல்லாயிரக்கணக்கான சித்திரங்களைத் தீட்டியுள்ளார். 1964 ஆம் ஆண்டில் அவரால் ஆரம்பிக்கப்பட்ட சிரித்திரன் என்ற மாத இதழ் அவரது மறைவு வரை சுமார் 32 வருடகாலம் தொடர்ந்து வெளிவந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
யாழ்ப்பாணம், கரவெட்டியில் பிறந்த சிவஞானசுந்தரத்தின் தந்தை இலங்கையின் முதலாவது தபால் மாஅதிபர் திரு வி. கே. சிற்றம்பலம். சுந்தரைக் கட்டிடக்கலை கற்பதற்கு இந்தியாவுக்கு அனுப்பினார் தந்தை. தந்தையின் விருப்புக்கு மாறாக அங்கு கார்ட்டூன் கலையைக் கற்றுக் கொண்டு ஒரு கேலிச்சித்திர விற்பன்னராக நாடு திரும்பினார். ஆரம்பத்தில் தினகரன், வீரகேசரி, மித்திரன் நாளிதழ்களில் கேலிச் சித்திரங்கள் வரைய ஆரம்பித்தார். அன்றைய தினகரனில் வெளிவந்துகொண்டிருந்த சவாரித்தம்பர் கார்ட்டூன் மிகப் புகழ் பெற்றது.
[தொகு] சிரித்திரன் சஞ்சிகை
முதன்மைக் கட்டுரை: சிரித்திரன்
முதன்முதலில் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள சென் பெனடிக்ற் மாவத்தையில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் 1964 இல் சிரித்திரனை வெளியிட ஆரம்பித்தார். 7 வருடங்கள் கொழும்பில் இயங்கிய பின்பு யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் இருந்து வெளியிட்டார். வெறும் சிரிப்புச் சஞ்சிகையாக மட்டுமல்லாமல் சிரிப்புடன் சிந்தனையையும் தூண்டும் பல சிறந்த ஆக்கங்களைச் சிரித்திரனில் பிரசுரித்தார்.
[தொகு] சுந்தரின் நூற்கள்
சிரித்திரன் சுந்தரின் கருத்தோவியங்கள் நூலாக சிரித்திரன் சித்திரக் கொத்து என்னும் நூலாக வெளிவந்திருக்கின்றன. கார்ட்டூன் உலகில் நான் என்று சுந்தரின் சுயசரிதையும் நூலாக வெளிவந்திருக்கிறது.
காலம், சுவைத்திரள் போன்ற சஞ்சிகைகள் சிரித்திரன் சுந்தர் சிறப்பிதழ்களை வெளியிட்டன.
[தொகு] மாமனிதர் விருது
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.