சீரகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சீரகம் (Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும்.
சுவையின்மை, பசியின்மை, வயிற்றுப் பொருமல் குணமாக பயன்படுகிறது..
சீரகம் {CUMINUM CYMINUM}
ENG- Cumin seed OR caraway seed FAM- UMBELLIFERAE
வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும். சீர்+அகம்=சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பொறும்பங்காற்றுகிறது. கார்ப்பு இனிப்பு சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மனம் சுவை செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
சீரகத்திலிருந்து 56% Hydrocarbons ,Terpene,Thymol போன்ற எண்ணைப்பொருக்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இதில் Thymol –[anthelminticagaint in HOOK WORM infections,and also as an Antiseptic] வயிற்றுப்புழுக்களை அழிக்கவும் கிருமிநாசினியாகவும் பல மருந்துக்கம்பனிகளின் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
நாட்பட்ட கழிச்சல் தீர மற்றமருந்துகளுடன் சேர்த்துகொடுக்க நல்லபலந்தரும். இரத்ததை சுத்தமாக்குகிறது,தொல் நோய்களை கட்டுப்படுத்துகிறது,
பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை,நெஞ்செறிச்சல் தீர சீரகம்+கொத்தமல்லி+சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து டீ போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகிவரலாம்.
வாய்ப்புண் உதட்டுப்புண் குணமாக சீரகம்+சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக்குறைக்க எழுமிச்சம்பழச்சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்து கொடுக்கலாம். தொண்டை கம்மல் மற்றும் மண்ணீரல் வீக்கத்தை குறைக்கும்.
விக்களை நிறுத்தும் “எட்டுத்திப்பிலி ஈரைந்து சீரகம் கட்டுத்தேனில் கலந்துண்ன விக்களும் விட்டுப்போகுமே விடாவிடில் நான் தேரனும் அல்லவே” என சித்தர் பாடல் ஒலிக்கிறது. சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச்செய்யும்.