பேச்சு:சுவான் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அன்ன ஆறு என்ற பக்கத்துக்கு நகர்த்தலாமா? swan river என்ற பெயர் அந்த ஆற்றில் உள்ள அன்னங்களை குறித்தே தரப்பட்டுள்ளது.--ரவி 14:34, 14 ஏப்ரல் 2007 (UTC)
- இதனைத் தமிழ்ப் படுத்தத்தேவையில்லை என்றே கருதுகிறேன். இது பெயர்ச்சொல். அப்படியே பெயரை வைப்பதே நல்லது. அன்னம் என்பது ஒரு கற்பனைப் பறவை என்று அன்னம் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது பார்க்க:)--Kanags 14:50, 14 ஏப்ரல் 2007 (UTC)
காரணத்தால் வந்த பெயர்ச்சொல்லை தமிழாக்குவதில் தவறில்லை என்றே நினைக்கிறேன். yellow river = மஞ்சள் ஆறு என்பது போல். ஆனால், பிற மொழி விக்கிபீடியாக்களிலும் இது swan river என்றே குறிப்பிடப்படுகிறது. அதனால், பெயர் மாற்றத்தைப் பெரிதும் பரிந்துரைக்க விரும்பவில்லை. அன்னம் பொய்யானாலும் [இந்தப்] பறவைக்குத் தமிழ்ப் பெயர் என்ன?--ரவி 16:26, 14 ஏப்ரல் 2007 (UTC)