சூனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூனி (zuni) எனப்படுவோர் வட அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சிவப்பிந்தியப் பழங்குடியினர். அரிசோனா மாநிலத்தின் எல்லையில் உள்ள வடமேற்கு நியூ மெக்சிகோவில் வாழ்கின்றனர். இவர்களின் மொத்த சனத்தொகை சுமார் 12,000 ஆகும்.
[தொகு] கலாசாரம்
அனசாசி (Anasasi) பழங்குடியினரின் வம்சாவழியினரான இவர்கள் சூனி மொழியைப் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள். அத்துடன் சூனி சமயத்தையும் பேணுகின்றனர்.
[தொகு] வரலாறு
இவர்கள் சுமார் 1300 வருடங்களாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.