செப்டெம்பர் 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] செப்டம்பர் 2006
- செப்டம்பர் 13, 2006 - ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் - மடன்ஜீற் சிங் சமரசம் அகிம்சை ஊக்குவிப்போருக்கான பரிசை (UNESCO-Madanjeet Singh Prize for the Promotion of Tolerance and Non-Violence) இலங்கை தமிழ் அரசியல்வாதி வி. ஆனந்த சங்கரி இவ்வாண்டு பெற்றுக்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. [1]
- செப்டம்பர் 4, 2006 - முதலை வேட்டைக்காரர் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய வனவிலங்கு ஆர்வலரான ஸ்டீவ் இர்வின் மரணம்.
- செப்டம்பர் 3, 2006 - 21 ஆண்டுகால தொழில்முறை டென்னிஸ் பங்கேற்பின் இறுதியாக அன்ட்ரே அகாசி ஓய்வு பெற்றார்.
- செப்டம்பர் 24, 2006 - பழம்பெரும் நடிகையான நாட்டியப்பேரொளி என அழைக்கப்படும் பத்மினி சென்னையில் மாரடைப்பால் காலமானார் (பி. ஜூன் 12, 1932).
[தொகு] செய்தித் தொகுப்பு
செப்டம்பர் 1
- 2006 - ஈழப்போர்: சுனாமி நிவாரணப் பணியாளர் செல்வரூபனும் அவரது தாயாரும் கரவெட்டியில் சுட்டுக்கொலை.(1)
- 2006 - திருகோணமலை நகரப் பகுதியில் சிவன் கோயிலுக்கு அருகில் வெள்ளைவானில் வந்த சிலர் 3 தமிழ் இளைஞர்களைக் கடத்தியுள்ளனர்.
செப்டம்பர் 15
- திருகோணமலை மட்டிக்குளியில் பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு அருகில் ஒரு கடற்படையினன் மாலை 5 மணியளவில் (இலங்கை இந்திய நேரம்) சுட்டுக் கொலை.
செப்டம்பர் 24
- திருகோணமலையில் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் வெளியூர் அழைப்புக்கள் யாவும் காலையில் இருந்து செயலிழந்துள்ள போதிலும் ஏனைய இணைப்புக்கள் வேலை செய்கின்றது. இந்நிறுவனத்தின் leased lines களும் செயலிழந்துள்ளன.