டின்டால் விளைவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டின்டால் விளைவு (Tyndall effect) என்பது கூழ்ம நிலையிலுள்ள பொருட்களின் வழியாகப் பாயும் ஒளிக்கதிர்களை அவற்றிலுள்ள கூழ்மத்துகள்கள் (colloidal particles) சிதறடிப்பதைக் குறிப்பதாகும். இவ்விளைவு இதைக் கண்டுபிடித்த அயர்லாந்து விஞ்ஞானி ஜான் டின்டால் என்பவரின் பெயரால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. பனிக்காலத்தில் வண்டிகளிலுள்ள முன்விளக்குகளின் ஒளி சிதறுவது இவ்விளைவினாலே ஆகும்.
புவியின் காற்று மண்டலமும் ஒரு கூழ்மக் கலவையே. இதன் காரணமாக சூரிய ஒளி சிதறடிக்கப்படுகிறது. குறைந்த அலைநீளம் (wavelength) கொண்ட கதிர்களே கூடுதலாக சிதறடிக்கப் படுகின்றன. இதன் காரணமாகவே வானம் நீல நிறமாகத் தென்படுகின்றது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- இராமன் விளைவு