தஞ்சை நாயக்கர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்தனர். இவ்வம்சத்தின் முதல் மன்னன் சேவப்ப நாயக்கன் என்பவனாவான். சேவப்ப நாயக்கன், விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயனுக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் அமர நாயக்கனாகவும் இருந்த திம்மப்ப நாகக்கனின் மகன்.