தலித் இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தலித் இலக்கியம் 1990களிலேயே தமிழுக்கு வருகிறது. ஆரம்பத்தில் தலித் இலக்கியம் குறித்த நம்பிக்கைகள் இருந்தன. ஆனால் அந்த நம்பிக்கைகள் நீடிக்கவில்லை. அரசியல், இலக்கியத்தில் இருந்து தன்னைப் பிரித்துக்கொண்டது. தலித் இலக்கியத்தை ஜனரஞ்சக பத்திரிகைகளும் இதழ்களும் அரவணைத்துக் கொண்டன. அதன் பிற்பாடு தலித் இலக்கியம் என்பது பெருவெளிய~ட்டாளர்களுக்கு லாபம் தருகின்ற ஒன்றாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் தலித் இலக்கியத்தை எதிர்த்த வணிகப் பத்திரிகைத் துறை லாபநோக்கம் கருதி, அதனை தன்வயப்படுத்திக் கொண்டது. தலித்துகள் மீதான ஒடுக்குமுறையும் தாக்குதல்களும் கொலைகளும் வதைகளும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தலித்துகளின் அலறல்தான் நமக்குக் கேட்கவில்லை. தலித் இலக்கியம் இப்போதும் மழலைப் பருவத்திலேயே இருக்கிறது. கோபமும் கோஷமும்தான் அந்த இலக்கியங்களில் பெருமளவுக்கு விரவிக் கிடக்கின்றன. தமது எழுத்துகளுக்கு பிரசுர வெளியைத் தேடுவதிலேயே தலித் எழுத்தாளர்கள் பெருமளவு நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது. தலித் புத்திசீவிகள் சென்றொழிந்த காலத்தையும் வரலாற்றையும் மீளக் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தலித் அரசியல்வாதிகள் பணத்துக்கும் அதிகாரத்துக்கும் பின்னால் அலைகிறரார்கள். தலித்துகளினுடைய அவலம், பெருமளவுக்குப் பதிவு செய்யப்படாமலேயே போகிறது.