தாமாகவுயிர்ப்பித்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாமாகவுயிர்ப்பித்தல் (autovivification) பெர்ள் நிரலாக்க மொழியின் இயங்குநிலையில் (dynamic) தரவுக் கட்டமைப்புகளை (data structures) உயிர்ப்பிக்க அனுமதிக்கும் ஒரு தனிச்சிறப்புப் பெற்ற வசதியாகும். ஒரு நிரலாக்கத்தில் அதுவரை வரையறுக்கப்படாத ஒரு மாறியை மேற்கோளாகக் கருதி அணுக முயன்றால் தாமாகவே ஒரு மேற்கோள்வகை இனங்காட்டி உருவாகி அது நினைவகத்தில் பதிவிடமும் ஒதுக்கப்படுவம் வசதியையே தாமாகவுயிர்ப்பித்தல் என்கிறார்கள். அதாவது, ஒரு இல்லாத இயைபுத் தொகுப்புத் தரவினத்தின் (associative array) உறுப்பையோ அல்லது நினைவடுக்குத் தரவினத்தின் உறுப்பையோ அணுக முற்படும்போது முறையே அவ்வியைபுத் தொகுப்பு அல்லது நினைவடுக்கு உருவாக்கப்பட்டு அணுகப்பட்ட உறுப்பு மற்றும் நினைவு அடுக்கில் அவ்வுறுப்பின் குறியெண் (index) வரையிலான அனைத்து உறுப்புக்களும் உருவாக்கப்பட்டுவிடுகின்றன.
இது பிற உயர்நிலை நிரல் மொழிகளான பைதான், பிஹெச்பி, ரூபி, ஜாவாசுகிரிப்டு மற்றும் சி நிரலாக்க மொழியைத் தழுவிய பிற மொழிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு வசதியாகும். இருப்பினும் அண்மையில் இவ்வசதியைப் போலவே பெர்ளுக்குப் பிற்பாடு வந்த ரூபியிலும் கொண்டுவரமுடியும் எனக் கூறப்படுகிறது.