தாராசுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாராசுரம் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.
இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.
பத்தாம் நூற்றாண்டில் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.
[தொகு] வெளி இணைப்புகள்
- தாராசுரம் பயணக்கட்டுரை (தமிழில்)