திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் சுந்தரருக்காக செங்கற்களைப் பொன்கற்களாக மாற்றினான் என்பது தொன்நம்பிக்கை. முருக நாயனார் அவதரித்த தலம் என்றும் அப்பர் இறைவனடி சேர்ந்த தலமென்றும் சொல்லப்படுக்றது.