திருமுதுகுன்றம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருமுதுகுன்றம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் பழமலைநாதர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமனும் அகத்தியரும் வழிபட்ட தலம் எனப்படுகிறது. சுந்தரர் பரவையாருக்காகப் பொன் பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).