துளசி மாடக் கோலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துளசி மாடக் கோலம் 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்திவரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறான கூறுகளை ஒன்றுடனொன்று மூலைகளில் தொடுத்துக் கோலத்தை விரிவாக்கம் செய்யலாம். இணைக்கப்படும் கூறுகளின் எண்ணிக்கைக்கோ அல்லது உருவாக்கும் உருவமைப்புக்கோ எதுவித எல்லையும் கிடையாது. கிடைக்கும் இடத்தின் அளவுக்கும், நேரத்துக்கும் தக்கபடி கோலத்தை அமைத்துக்கொள்ள முடியும். கோலம் வரைபவரின் கற்பனாசக்திக்கு ஏற்றபடி கோலத்தின் உருவ அமைப்புக்கு பொருத்தமான பெயரையும் இட்டுக்கொள்ளலாம்.
ஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டதுபோல்தான் இருக்கவேண்டுமென்ற தேவை இல்லை. 7 x 7 நேர்ப்புள்ளிகளைப் பயன்படுத்தி பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரையமுடியும். அதுமட்டுமின்றி 7 x 7 நேர்ப்புள்ளிகளுக்குப் பதிலாக புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ, கூட்டியோகூட வெவ்வேறு அளவுள்ள கூறுகளை உருவாக்கலாம்.