தொட்டில் கோலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தொட்டில் கோலம், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்குப் பயன்படுத்தும் தொட்டிலை abstract வடிவில் வெளிப்படுத்தும் கோலம் ஆகும். குழந்தை கிருஷ்ணரின் தொட்டிலாகக் கருதி இக் கோலத்தை வரைவதுண்டு. எனவே "கண்ணன் தொட்டில்" என்ற பெயரும் உண்டு. வரைவதற்கு இலகுவான சிறிய கோலங்களில் இதுவும் ஒன்று. இக் கோலத்தில் ஓரிரு வேறுபாடுகளும் உள்ளன. இதன் அடிப்படையான வடிவத்தை பயன்படுத்தி பெரிய அளவு கோலங்களையும் வரையலாம். நிறப் பொடிகளை பயன்படுத்தி அழகு படுத்தவும் பொருத்தமானது இந்தக் கோலம்.