பேச்சு:தொன்மா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செல்வா, தொன்மா - சொல் நன்று. இச்சொல் ஏற்கனவே எங்கும் ஆளப்பட்டுள்ளதா? நீங்கள் புதிதாக ஆளும் சொற்களைப் பற்றிய குறிப்புகளை பேச்சுப் பக்கத்தில் இட்டு வைத்தால் அது ஒரு வரலாற்று, கலைச்சொல் ஆவணமாக இருக்கும். நன்றி--ரவி 08:27, 23 மார்ச் 2007 (UTC)
- இல்லை. இது நான் ஏறத்தாழ 15 ஆண்டுகளாக பயன்படுத்திவரும் ஒரு சொல். என் தங்கையின் குழந்தைக்கு தொன்மா என்றால் தான் என்ன என்று தெரியும் ஒரு காலத்தில்.மிக அருமையான தொன்மா பொம்மை ஒன்றை வாங்கி பரிசாக அளித்ததின் விளைவாக அது அவளுக்கு அன்றுமுதல் தொன்மா. கொடும்பல்லி முதலிய பொருந்தாததாக எண்ணுகிறேன். உடல் அமைப்பில் ஊர்வன-பல்லி முதலானவற்றின் இடுப்பு போலும், பறவைகளின் இடுப்பு போலும் அமைந்துள்ள விலங்குகள். இதுபற்றியே இவை டயன்சோர் என ஆங்கிலத்தில் பெயர் கொண்டுள்ளது. தமிழிலும், டயன்சோர் என்பதற்கு வழிமாற்று தரவேண்டும்.--செல்வா 12:20, 23 மார்ச் 2007 (UTC)
செல்வா, தொன்மா உட்பட டைனோசருக்கு தமிழில் வேறு எங்கும் தமிழ்ப் பெயர்கள் வழங்கப்பட்டு இருந்தால் அது பற்றிய குறிப்புகளைத் (குறிப்புக்காக மட்டுமே) தர முடியுமா? உங்களைத் தவிர வேறு எவரும் பயன்படுத்தி இருக்கின்றனரா என்றும் அறிய ஆவல். பொதுவாக, நம் நாட்டில் இருந்திராத இருக்க இயலாத பென்குயின் போன்ற விலங்குகள், மரஞ்செடிக் கொடிகளின் பெயர்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது சரியா என்பது குறித்து எனக்குத் தெளிவில்லை. பலரும் பல மாதிரி மொழிபெயர்க்க இயலும் அல்லவா? இதற்கு சீர்தரம் பேணுவது எப்படி? இல்லை. இது குறித்து தமிழில் முன்னோடியாக எழுதுபவர்களின் மொழிபெயர்ப்புகள் நிலைத்து விடுகின்றனவா? எடுத்துக்காட்டுக்கு, ஆந்திரா , வட மாநிலங்களில் tomato என்றே அழைக்கிறார்கள். ஆனால். அது நமக்கு எப்படித் தக்காளி ஆனது? அதே வேளை காரட், பீன்ஸ் போன்றவை அதே பெயரில் வழங்கி வருகின்றன. இது போன்ற மொழிபெயர்ப்புகளில் உள்ள வழிமுறை, நிலைப்பாடுகள் குறித்து விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி--ரவி 15:09, 23 மார்ச் 2007 (UTC)
- ரவி, தொன்மாவுக்குப் பிற பெயர்கள் இருக்கலாம், எனக்குத் தெரியாது. தமிழ் டாட் நெட்டில் எழுதும்பொழுது மணிவண்ணன் ஒரு காலத்தில் ஏதோ ஒரு பெயர் ஆண்டார் என்று நினைக்கிறேன். தேடிப்பார்த்துச் சொல்கிறேன். கிரேக்கம் போன்ற தொன்மொழிதான் தமிழும். இது வளமான மொழி. இதில் நமக்கு ஏற்றார்போல சொற்களை ஆக்கி ஆள்வதில் தவறில்லை. நம்மூர் (அல்லது கிழக்கே) கிடைக்கும் பலாப்பழத்துக்கு ஆங்கேலேயர் பலா என்றா சொல்கின்றான்? சில சொற்கள் நாம் அப்படியே எடுத்தாள்வதில் தவறில்லை, எல்லாச் சொற்களும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்பது தேவை இல்லாதது. இக்காலத்தில் (அதுவும் கணினி - தேடுபொறிகள் உள்ள காலத்தில்), நமக்கு ஏற்ற முறையில் ஆக்கிக்கொள்வதே சிறந்தது. அறிவியல் பெயர் என்பதைக் கூட இன்று ஜெர்மனியர் வேறுவிதமாக தங்கள் மொழியில் எழுதுகிறார்க்கள் என நினைக்கிறேன். நான் triceratops என்பதை முக்கொம்பன் (முக்கொம்பன் தொன்மா) என்றுதான் எழுத இருக்கின்றேன். ஐங்கொம்பன் தொன்மா என்ன என்று கண்டுபிடியுங்கள். ஆங்கிலப்பெயரையும், அதன் தமிழ் எழுத்துப்பெயர்ப்பையும் தருவது முறை என்று நினைக்கின்றேன். இவையெல்லாம் விரிக்கின் மிக விரியும் ரவி. --செல்வா 15:56, 23 மார்ச் 2007 (UTC)
விளக்கத்துக்கு நன்றி, செல்வா. உங்களுக்கு இயன்ற போது உங்கள் வலைப்பதிவில் இது குறித்து எழுதினால் பயனுள்ளதாய் இருக்கும். நன்றி--ரவி 15:59, 23 மார்ச் 2007 (UTC)
- நல்ல கட்டுரை. நன்றி செல்வா. Mayooranathan 09:03, 23 மார்ச் 2007 (UTC)
- நன்றி மயூரநாதன். --செல்வா 12:20, 23 மார்ச் 2007 (UTC)
போஞ்சி எனப்படுவது பீன்ஸ் தானே? தொன்மா நல்ல சொல். ஆனால் சொல் விளக்கத்தைக் கட்டுரையிலிருந்து சற்று வேறுபடுத்தி அமைத்தால் என்ன? தனிப்பிரிவாக அல்லது ஒரு பெட்டியினுள் வருவது போல அமைப்பது தொன்மா பற்றி வாசிக்கும்போது சொல்விளக்கம் தகவல்களிடையில் வந்து குழப்பாமலிருப்பதோடு சொல்விளக்கம் தனித்திருப்பதால் போதிய கவனமும் பெறுமென எண்ணுகிறேன். கோபி 17:45, 23 மார்ச் 2007 (UTC)
இது போல் புதுச்சொற்களுக்கு கோபி சொல்வது போல் தனிப் பகுதியாக கட்டுரைக்குள் தரலாம். அதே வேளை பட்டாம்பூச்சியில் செதிலிறகிகள் குறித்த சொல் விளக்கம் கட்டுரையின் போக்கிலேயே இருந்தது பட்டாம்பூச்சிகளை மேலும் இலகுவாகப் புரிந்து கொள்ளத் தக்கதாக இருந்தது. எனவே, மொழிபெயர்ப்புச்சொல்லாக இருந்தால் கட்டுரைப் போக்கில் தரலாம். புதுச்சொல் என்றால் தனிக்குறிப்பாகத் தரலாம். --ரவி 18:51, 23 மார்ச் 2007 (UTC)
[தொகு] தொன்மா சொற்கள்
ரவி, ஒருமுறை முனைவர் மணிவண்னனுக்கும், தமிழ் டாட் நெட்டின் பாலா பிள்ளைக்கும் கடும் சொற்போராட்டம் ஏற்பட்டபொழுது துணுச்சரைகள் என்னும் சொல்லை டைனசோருக்கு பயன்படுத்தினார்கள். ஏன் எதனால் அப்பெயர் ஏற்பட்டது என்பதனை அறியேன். கட்டுரை ஏதும் ஆக்கியதாகவும் அறியேன். உரையாடலின் ஒரு பகுதியை இங்கே] பார்க்கலாம். வேறு ஏதேனும் சொற்கள் யாரும் ஆண்டிருந்தாலும் தொகுத்து இங்கே இடுவது பொருளுடையதாக இருக்கும்.
புதுச் சொற்களுக்கு பட்டிகட்டி தரலாம். எப்படிச்செய்தால் நன்றாக இருக்குமோ அப்படியே செய்யுங்கள். கனகும் உரைத்திருத்தம் செய்வதில் நல்ல தேர்ச்சியுடையவர். அவரும் பங்களித்தால் நன்றாக இருக்கும். --செல்வா 21:13, 23 மார்ச் 2007 (UTC)
- செல்வா, அவர்கள் பாவித்த சொல் துணுசாரைகள்.--Kanags 22:52, 23 மார்ச் 2007 (UTC)
- நன்றி கனகு. இச்சொல்லை நான் மேலே குறித்துள்ளேன். பிற சொற்கள் இருப்பதை அறிந்தால் தெரிவியுங்கள். நன்றி.--செல்வா 23:29, 23 மார்ச் 2007 (UTC)
dinosaurs-டினோசர்-தினோசர்-துனோசார்-துணுச்சாரை - என்பது போல் ஒலிப்பு நெருக்கம், தொடர்பு வருவது தற்செயலா? இல்லை, வேண்டி செய்யப்பட்டதோ? எப்படியோ, தகவலுக்கு நன்றி--ரவி 23:54, 23 மார்ச் 2007 (UTC)
- துணுச்சாரை dinasaur என்பதன் நேரடி பெயர்ப்பாக இருக்கலாம். நல்ல சொல். ஆனால் இது சாரை என்ற பாம்பு வகையோடு குழப்புவதாக அமையாதா?--Kanags 00:42, 24 மார்ச் 2007 (UTC)
-
- சாரை என்பது reptile என்பதோடு தொடர்புபடுத்தி யிருப்பார் எனத் தோன்றுகின்றது. இர்ரம.கி யின் அலைப்பதிவில் தேடினேன் கிடைக்கவில்லை. இது 1999ல் நடந்த பேச்சு. அப்பொழுது வலைப்பதிவெல்லாம் கிடையாது. --செல்வா 00:51, 24 மார்ச் 2007 (UTC)
[தொகு] தமிழ்.நெட் இல் மணி மணிவண்ணனின் கருத்துகள்
(திஸ்கியில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றியது) To tamil@tamil.net From "Mani M. Manivannan" <manim@ix.***> (by way of Bala Pillai <bala@tamil.net>) Date Thu, 26 Aug 1999 14:37:43 +1000 கணினிப் பல்கலைக்கழகம் ("computer university") என்ற இழையில் பாலா பிள்ளை தனக்கு மிகவும் பிடித்த கூற்று ஒன்றை மீண்டும் எழுதினார்:
"How did smallish fleet-footed mammals (சீக்கரநடை பாலுட்டிகள்) outlive and overtake the large dinosaurs (துணுசரைகள்) which became extinct, in history? What was the glue that made the mammals collectively more powerful?"
இந்தக் கூற்றின் தொடர்பில் அவர் தமிழ் இணைய உறுப்பினர்களுக்கு விடுத்த அறைகூவலுக்குத் தமிழ் இணைய உறுப்பினர்களே பதிலளிப்பார்கள் என நம்புகிறேன். ஆனால், மந்த நடைத் துணுச்சாரைகளைக் குறுநடைப் பாலூட்டிகள் வென்றன என்ற அவர் கூற்று சரியா என்ற எண்ணம் எழுகிறது.
கற்பொடிக்காலத்தின் (Cretaceous Period) இறுதியில் பேரழிவு ஏற்பட்டது உண்மைதான். பல உயிரினங்கள் அடியோடு அழிந்து போயின இக்காலத்தின் இறுதியில். ஐம்பது பவுண்டு எடைக்கு மேற்பட்டிருந்த பல உயிரினங்கள் அழிந்தன. கடல்வாழ் உயிரினங்களும் அவிந்தன. ஆனால் எல்லா உயிரினங்களும் ஒரே அளவில் அடிபடவில்லை. நீரினங்களிலும், கடல்வாழ் இனங்கள் அழிந்த அளவுக்கு நந்நீரினங்கள் (freshwater species) அழியவில்லை. வடகோடியில் (northern/polar plants) வாழ்ந்த செடியினங்கள் தப்பித்தன. நிலநடுக்கோட்டருகிருந்த வேனிற்செடியினங்கள் (tropical plants) வாடின. இறகுச்சாரைகள் (pterosaurs) அழிந்தன. பறவைகள் அழியவில்லை. பல பாலூட்டிகள் தப்பித்தன. ஆனால் பல வயிற்றுப்பைப்பாலூட்டிகள் (marsupials) பிழைக்கவில்லை. துணுச்சாரைகள் அழிந்தன. ஆனால் முதலைகள் பிழைத்தன. அளவில் மிகச்சிறிதாக இருந்த பாலூட்டிகளும், சிறு ஓணானினங்களும் (lizards) பிழைத்தன. ஆனால் சின்னஞ்சிறு துணுச்சாரைகளும் உயிரிழந்தன. இந்தப் பேரழிவு எதனால் ஏற்பட்டது? சிலர் நம்பிக்கைப்படி உயிர்க்காற்றின் (oxygen) அளவு காற்றுமண்டலத்தில் (atmosphere) கூடியதால், மந்தநடைத் துணுச்சாரைகள் தளர, வெங்குருதிக் குறுநடைப் பாலூட்டிகள் (warm-blooded fleet-footed mammals) ஓங்கின. இதற்கு ஆதாரம் உள்ளதா? சில ஆதாரங்களின்படி கற்பொடிக்காலத்தில் உயிர்க்காற்றின் அளவு 30% இருந்ததாம் (இன்று 21%). அது நம்பமுடியாத அளவு - அந்த அளவில் பல உயிரினங்கள், ஏன், உலகில் இருந்த பல பொருட்களே வெந்து தணிந்து சாம்பலாகியிருக்கும்.
சிலர் கூற்றின்படி, குறுநடைப் பாலூட்டிகள் துணுச்சாரை முட்டைகளை வேட்டையாடி அழித்தன. எல்லா துணுச்சாரைகளும் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பனவில்லை. மேலும், வேட்டையாடும் இனங்களும் தங்கள் இரைகள் அழிந்தால் விரைவில் அழியும். அது மட்டுமல்லாமல், குறுநடைப் பாலூட்டிகள் ஏனைய உயிரினங்களையுமா அழித்தன என்ற கேள்வியும் எழுகிறது.
வெப்பநிலை கூடியதால், துணுச்சாரை விந்துக்கள் குறைந்து அவை மலடாயின என்று கூறுவாரும் உண்டு. அல்லது, அதனால், துணுச்சாரைக் குஞ்சுகள் எல்லாமே ஒரே பாலினமாகப் (same gender) பொரித்தன என்பாரும் உண்டு. தளிரகவினையினால் (செடிவீட்டுச்செயல், green-house effect) கரியமிலக்காற்றின் அளவு கூடி, வெப்பநிலை கூடியிருக்கும் வாய்ப்பு உள்ளது என்று அறிவியலாளர் சிலர் கருதுகின்றனர். மணி மு. மணிவண்ணன் நூவர்க், கலி., அ.கூ.நா. --Kanags 02:07, 24 மார்ச் 2007 (UTC)