நகரசபை (இலங்கை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கையில், நகரசபை என்பது, ஒரு உள்ளூராட்சி அமைப்பு ஆகும். தரநிலை வரிசையில் மாநகரசபைக்கு அடுத்ததாக இரண்டாவது நிலையில் உள்ளது. இலங்கையில், நகரசபைச் சட்டத்தின் அடிப்படையில் நகரசபைகள் அமைக்கப்பட்டு இயங்குகின்றன. பிரித்தானியர் ஆட்சியின்போது, 1939 ஆம் ஆண்டில் முதன்முதலில் நகரசபைகள் உருவாக்கப்பட்டன. தற்போது இலங்கையில் உள்ள நகரசபைகளின் எண்ணிக்கை 37 ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] கடமைகளும், அதிகாரமும்
நகரசபைகளின், அதிகாரம், கடமைகள் தொடர்பாக நகரசபைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நகரசபையொன்றின் எல்லைக்கு உட்பட்ட, பூங்காக்கள், திறந்த வெளிகள், தோட்டங்கள், கால்வாய்கள், பொதுச் சந்தைகள், பொதுக் கட்டிடங்கள் என்பன நகரசபைக்குச் சொந்தமானவை.
நகரசபையின் அதிகாரத்தின் கீழ்வருகின்ற தெருக்கள், ஒழுங்கைகள் முதலியவற்றைத் துப்புரவு செய்து பேணுதல், திட்டமிடல், தெருக்களை அகலமாக்கல், திறந்த வெளிகளுக்கு இடங்களை ஒதுக்குதல் போன்ற நடவடிக்கைகளின்மூலம் நகரின் வளர்ச்சியை ஊக்குவித்தல், பொது வசதிகளை நிறுவிப் பேணுதல், பொதுச் சுகாதாரத்தை ஊக்குவித்தல் மற்றும் அதற்கான வசதிகளை மேம்படுத்தல் முதலியவை நகரசபையின் கடமைகளாக இருக்கின்றன.
[தொகு] அமைப்பு
நகரசபைகளுக்கு உறுப்பினர்கள் மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். நகரசபைகளில் தலைமை நிறைவேற்று அதிகாரி, அதன் தலைவர் எனப்படுகிறார். இவரும் துணைத் தலைவரும்கூட நேரடியாக மக்களாலேயே இன்று தெரிவு செய்யப்படுகின்றனர்.
[தொகு] மாகாண / மாவட்ட அடிப்படையில் நகரசபைகள்
மாகாணம் | மாவட்டம் /எண்ணிக்கை |
நகரசபைகள் |
---|---|---|
மேல் மாகாணம் |
கொழும்பு / 5 | கொலன்னாவை, சீதாவாக்கைபுரம், மகரகம, கெஸ்பாவை, பொரலஸ்கமுவை |
கம்பகா / 5 | வத்தளை-மாபோலை, கட்டுநாயக்கா-சீதுவை, மினுவாங்கொடை, ஜாஎலை, பேலியாகொடை | |
களுத்துறை / 4 | பாணந்துறை, ஹொரணை, களுத்துறை, பேருவளை | |
மத்திய மாகாணம் |
கண்டி / 4 | வத்தேகமை, கடுகன்னாவை, கம்பளை, நாவலப்பிட்டி |
நுவரஎலியா / 2 | ஹற்றன்-டிக்கோயா, தலவாக்கொல்லை-லிந்துல | |
தென் மாகாணம் |
காலி / 2 | அம்பலாங்கொடை, ஹிக்கடுவை |
மாத்தறை / 1 | வெலிகமை | |
அம்பாந்தோட்டை / 2 | அம்பாந்தோட்டை, தங்காலை | |
வட மாகாணம் |
யாழ்ப்பாணம் / 3 | வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி |
மன்னார் / 1 | மன்னார் | |
வவுனியா / 1 | வவுனியா | |
கீழ் மாகாணம் |
மட்டக்களப்பு / 1 | காத்தான்குடி |
அம்பாறை / 1 | அம்பாறை | |
திருகோணமலை / 2 | திருகோணமலை, கிண்ணியா | |
வடமேல் மாகாணம் |
குருநாகல் / 1 | குளியாப்பிட்டி |
புத்தளம் / 2 | புத்தளம், சிலாபம் | |
வடமத்திய மாகாணம் |
--- | -- |
ஊவா மாகாணம் |
பதுளை / 2 | பண்டாரவளை, அப்புத்தளை |
சப்பிரகமுவா மாகாணம் |
இரத்தினபுரி / 2 | பலாங்கொடை, எம்பிலிப்பிட்டியா |
கேகாலை / 1 | கேகாலை |
[தொகு] உசாத்துணைகள்
- 2006 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சித் தேர்தல்கள் தொடர்பான தேர்தல் ஆணையாளரின் பொது அறிவித்தல் (ஆங்கிலத்தில்)
- ஆசிய பசிபிக் பகுதிகளுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார சமூக ஆணையத்தின் உள்ளூராட்சி தொடர்பான ஒப்பீட்டாய்வு - இலங்கை (ஆங்கிலத்தில்)