நடபைரவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நடபைரவி 20 வது மேளகர்த்தா இராகமாகும். வேத என்றழைக்கப்படும் 4 வது சக்கரத்தில் 2 வது மேளம்.
2. ஆரோகணம் : ஸ ரி க ம ப த நி ஸ் அவரோகணம் : ஸ் நி த ப ம க ரி ஸ
3. இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம், பஞ்சமம், சுத்த தைவதம், கைசிகி நிஷாதம் ஆகிய சுரங்கள் வருகின்றன.
4. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடான இராகம் அசாவேரி தாட்.
ஐரோப்பிய இசையிலும், கிரேக்க இசையிலும் இதற்கு ஈடான இசை அமைப்பு இருப்பதாக அறியவருகிறது.
இந்த மேளத்தில் பல ஜன்ய இராகங்கள் உண்டு.
ரி, நி ஆகிய சுரங்கள் தீர்க்கமாக இசைக்கப்படுகிறன.
[தொகு] உருப்படிகள்
1/ கிருதி : பருலசேவா : ரூபகம் : இராமனாதபுரம் சீனிவாச ஐயங்கார்.
2/ கிருதி : சிறீ வள்ளி தேவ :ஆதி : பாபனாசம் சிவன்.
3/ கிருதி : எண்ணுவதெல்லாம் : ஆதி : பெரியசாமித்தூரன்.
4/ கிருதி : அம்போருகபாதமே : ரூபகம் : கோடீஸ்வர ஐயர்.
5/ கிருதி : ஐயனே நடனமாடிய : மிஸ்ர ஜம்பை : முத்துத் தாண்டவர்.