நரம்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாடிகள்
(உடலில் உள்ள நிலையை நாடுவதால் இப்பெயரிட்டனர்)
இவை உடலின் உந்திச் சுழியிலிருந்து கீழிருந்து மேல்புறமாய் பேய்ச்சுரைக்காயின் கூடுபோல் உடலைப் பின்னி நிற்பன. இவை மொத்தம்72,000 என நூல்கள் கூறுகின்றன. இவற்றின் சிலவற்றிற்கு முழு விவரம் மருத்துவ நூல்களில்தான் கிட்டுகின்றன.
தலயில் 7,000 வலது காதில் 1,500 இடது காதில் 1,500 வலது கண்ணில் 2,000 இடது கண்ணில் 2,000 மூக்கில் 3,330 பிடரியில் 1,000 கண்டத்தில் 1,000 வலது கையில் 1,500 இடது கையில் 1,500 தொண்டைக்கும் நாபிக்கும் மத்தியில் 8,990 பிடரியின் கீழ் 8,000 விலாவில் 3,000 கால்களின் சந்தில் 8,000 பீசத்தின் மேல் 2,000 பீசத்தின் கீழ் 2,000 பாதத்தில் 1,000 பிடரிக்குப் பின்னால் 3,680 கோசம் 13,000
***********
ஆக நரம்புகள் 72,000
***********
பெருவாரியான ஞான நூல்கள் பத்து நாடிகளுக்குத்தான் முக்கியத்துவம்
தருகின்றன. இதிலும் இடகலை, பிங்கலை, சுழிமுனை ஆகிவைகளே மிக அதிகமாக
விவாதிக்கப்படுகின்றன.
இடகலை - வாத நாடி
பிங்கலை - பித்த நாடி
சுழிமுனை - சிலேத்தும நாடி
இம்மூன்றையும் வைத்துத்தான் நம் முன்னோர், அதிலும் வைத்தியர்கள் உடலின் நோய்களைக் கண்டறிந்தனர்.
இ(டை)ட கலை - இடது நாசியினுள்ளே செல்லும் உயிர்க்காற்று. இதுவே சந்திர நாடி.
சக்தி நாடிஎன்போருமுண்டு.
பிங்கலை - வலது நாசியினுள்ளே செல்லும் உயிர்மூச்சு. இதைச் சூரியநாடி, சிவநாடிஎன்பர்.
சுழிமுனை - அக்கினி நாடி. இடத்திற்கு இடம் மறுபடும்.
சிகுவை - உள்நாக்கு நரம்பு
புருடன் - வலக்கண் நரம்பு
காந்தாரி - இடக்கண் நரம்பு
அத்தி - வலது காது நரம்பு
அலம்புடை - இடக் காது நரம்பு
சங்கினி - ஆண்(பெண்) குறி நரம்பு
குகு - குத நரம்பு
ரக்தவியானன் - இனப்பெருக்கத்திற்குறிய சுக்கிலம், முட்டை ஆகியவைகளை வெளித் தள்ளும் நரம்பு.