நல்லூர் சட்டநாத ஈஸ்வரர் கோவில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நல்லூர் சட்டநாதர் கோயில் இலங்கை யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தோற்றம் சட்டநாதர் என்னும் ஒரு சித்தரின் சமாதியுடன் தொடர்புடையது. இச்சித்தர் 10, 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவர். இவர் பாம்பாட்டிச் சித்தரின் குருவாவர். பாம்பாட்டிச் சித்தர் இந்த ஆலயம் பற்றிப் பல பாடல்கள் இயற்றியுள்ளார். 18 ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்த ஆலயம் உருவாகியிருக்கவேண்டும். ஏனெனில் யாழ்ப்பாண வைபவமாலை இந்த ஆலயத்தை சட்டநாதேஸ்வரர் என்ற மருவுப் பெயரில் குறிப்பிடப் பட்டுள்ளது. சட்டை முனியுடன் தொடர்புள்ள இத்திருத்தலம் சட்டைநாத ஈஸ்வரர் என்றிருந்து பின்னர் மருவி சட்டநாதர் ஈஸ்வர கோயிலாக மாறியிருக்கலாம்.
[தொகு] உசாத்துணை
- ஈழத்துச் சிவாலயங்கள், வித்துவான் வசந்தா வைத்திய நாதன்