நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நாலாயிரத்திவ்ய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ மார்கத்தில் ஓர் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது.
கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டுக்குள் 12 ஆழ்வார்களால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை நாதமுனிகள் தொகுத்து நாலாயிரத்திவ்ய பிரபந்தமாக மக்களுக்கு அளித்தார்.
இந்தப் பாடல்கள் அனைத்தும் பெருமாளையும் அவரது பல்வேறு அவதாரங்களைக் குறித்தும் அமைந்துள்ளன. பெருபாலான பாடல்கள் 108 திவ்ய தேசங்களில் பாடப்பட்டுள்ளன.
தமிழகத்தில், இந்துக்கள் இதை வேதங்களுக்கு இணையாகக் கருதுவதால், இது திராவிடவேதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தொகுப்பில், சுமார் 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் இயற்றப்பட்டதாகும்.