நீரிழிவு நோய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நமது இரைப் பையும் குடலும் உணவிலிருந்து க்ளுகோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது.
க்ளுகோஸ் எனும் வெல்லம் தான் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தி. இது குருதியின் மூலம் உடலில் உள்ள கலன்களை சென்றடைய வேண்டும். ஆனால் கலன்கள் தானாக வெல்லத்தை உள்ளே அனுமதிக்காது. அதற்குத் தான் இன்சுலின் உபயோகப்படுகிறது.
ஏதாவது ஒரு காரணத்தால் குருதியில் உள்ள வெல்லம் தேவையான அளவிற்கு கலன்களுக்குள் செல்ல முடியாமல் குருதியிலேயே தங்கி விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதனால் குருதியில் வெல்லம் அளவு அதிகமாகி விடும். இவ்வாறு இருக்கும் நிலை தொடர்ந்து காணப்பட்டால் தான் அது நீரிழிவு நோய்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தாங்கள் சாப்பிடும் உணவை உடலுக்கான சக்தியாக மாற்ற முடியாததால் தேவையான அளவு உணவு உண்டும் களைத்தும் சோர்வாகவும் காணப்படலாம்.
பொருளடக்கம் |
[தொகு] குருதியில் உள்ள வெல்லம் கலன்களுக்குள் நுழைய முடியாததன் காரணம்?
பல காரணங்களால் இது நிகழலாம்.
- தேவையான அளவு இன்சுலின் கணையத்திலிருந்து உற்பத்தியாகாமல் போகலாம்.
- இன்சுலின் தேவையான அளவு இருந்தும் சரியாக செயல்படாமல் இருத்தல்.
போன்ற காரணங்களால் ஏற்படலாம்.
[தொகு] நீரிழிவு நோய் யாருக்கு ஏற்படும்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இருப்பினும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் பரம்பரையில் நீரிழிவு நோய் இருப்பவர்கள் எடை அதிகமாக இருப்பவர்கள் ஆகியவர்களுக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், தங்களுடைய மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
[தொகு] நீரிழிவு நோய் வந்ததன் அறிகுறிகள் என்னென்ன?
பல சமயங்களில் அறிகுறிகள் சரியாக தென்படாமல் போகிறது. சில பொதுவான அறிகுறிகள்
- அடிக்கடி சிறுநீர் கழிப்பது
- அடிக்கடி தாகம்
- அதிக பசி
- மிக வேகமாக எடை குறைதல்
- அதிகமாக சோர்வடைவது
- கண்பார்வை மங்குதல்
- வெட்டு காயம் / சிராய்ப்பு ஆகியவை ஆறுவதற்கு அதிக காலம் பிடித்தல்
- திரும்ப திரும்ப சருமம், ஈறு மற்றும் சிறுநீர்ப்பையில் தொற்று நோய்
[தொகு] நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னென்ன?
இரண்டாம் வகை நீரிழிவு நோயால் ஏற்படக்கூடியவை.
- பார்வை இழப்பு
- மாரடைப்பு
- சிறுநீரகக் கோளாறு
- பக்கவாதம்
- கால்களை இழத்தல்
- கோமா மற்றும் இறப்பு