நுகர்வோன்மிகை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிற்றினப் பொருளியலில் அடிப்படைக்கருத்துகளில் ஒன்றாகும். ஒரு பொருளை நுகர்வதிலிருந்து கிடைக்கின்ற மொத்த பயன்பாட்டிற்கும், அதற்காக அவர் செலுத்துகின்ற விலைக்கும் இடையேயுள்ள வேறுபாடானது பொருளியலில் நுகர்வோன்மிகை எனப்படும்.அதாவது ஒரு நுகர்வோன் ஒருவன் பொருளுக்கு கொடுக்கும் விலைக்கும் அதனால் அவன் பெற்ற பயன்பாடு அல்லது மனநிறைவு பற்றி நுகர்வோன் மிகை விளக்குகின்றது.
உ+ம்: உப்பு, தீப்பெட்டி, தினசரிப் பத்திரிகை என்பன நுகர்வோன் மிகையுள்ள பொருட்களாகும்.
இங்கு பயன்பாட்டினைப் பணம் கொண்டு அளக்கலாம் எனும் எடுகோள் பயனபடுத்தப்படுகின்றது. பயன்பாட்டினை பண அளவு கொண்டு அளவிடமுடியாது என்கின்ற பொருளியலாளர்கள் நுகர்வோன்மிகை கருத்தினை மறுக்கின்றனர்.
எனினும், நுகர்வோன் மிகை சந்தைஅமைப்புகளிலும், அரசபொருளியலிலும் முக்கிய இடம்வகிக்கின்றது. தனியுரிமைச் சந்தையாளன், நுகர்வோன்மிகையுள்ள பொருட்களின் விலைகளை சந்தையில் அதிகரிக்கும் வழிமுறைகளில் ஈடுபடுவான். அரசாங்கமானது நுகர்வோன்மிகையுள்ள பொருட்களுக்கு வரிவிதித்தலிலும், நுகர்வோன்மிகையற்ற பொருட்களுக்கு மானியம் வழங்குவதிலும் ஈடுபடும்.
நுகர்வோன் எச்சம் / வாங்குவோர் எச்சம் / Consumer surplus எனவும் அழைக்கப்படும்.
நுகர்வோன் மிகை கருத்து முதலில் டுபியிட் (Dupuit) என்பவரால் முன்வைக்கப்பட்டது பின்னர் அல்பிரட் மார்சலினால் விரிவாக்கம் பெற்றது.
சிற்றினப்பொருளியல் தலைப்புக்கள்
கிடைப்பருமை - சந்தர்ப்பச்செலவு - இணைபயன் வளையீ கேள்வி-நிரம்பல் - நுகர்வோர்மிகை - சந்தைச் சமனிலை - சந்தை உற்பத்தி - செலவு |