நேபாள மக்கள் புரட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நேபாள மக்கள் புரட்சி அல்லது நேபாள உள்நாட்டு யுத்தம் என்பது நேபாளத்தின் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை உருவாக்கும் நோக்குடன் மாவோயிசவாத போராளிகளால் நடத்தப்படும் போராகும். இது 1996 பிப்ரவரி 13 இல் ஆரம்பிக்கப்பட்டது. சமவுடமைவாத போராளிகள் இப்போரை "நேபாள மக்கள் போராட்டம்" என அழைக்கின்றார்கள். இப்போராளிகள் "மக்கள் நேபாள குடியரசு" என்ற இலக்கை கொண்டுள்ளார்கள் தற்சமயம் நேபாளத்தின் சில பகுதிகளை தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளார்கள். 1998 யூன் தொடக்கம் ஆகஸ்டு வரை அப்போதைய பிரதமர் சேர்பகதூர் தெவுபாவினால், போராளிகளை கைப்பற்றி அழிக்கும் நோக்குடன் நடைமுறைப் படுத்தப்பட்ட "கிலோ சேரா 2" என்ற மூர்க்கமான நடவடிக்கை காரணமாக போராளிகள் தலைமறைவாகினர் மேலும் போராட்டம் வலுக்கவும் வழிவகுத்தது. 2001 இல் நேபாள மன்னர் மாவோயிச போராளிகளுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். அது முதல் 12,700க்கும் மேற்பட்டவர்கள்[1] இறந்தும் 100,000 - 150,000 பேர்வரை இடம்பெயர்ந்தும் உள்ளனர்.இப்போராட்டம் நேபாளத்தின் கிராமிய அபிவிருத்திப் பணிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக விளங்குவதோடு நேபாள மக்களிடையே பெரும் சிக்கலான சமூக சிக்கல்களுக்கும் வித்திட்டுள்ளது.
[தொகு] கால ஓட்டம்
- 2001
- யூன் 1 அரசர் பிரேந்திரா மற்றும் அவரது குடும்பம் அவரது மகனான முடிக்குறிய இளவரசன் தீபேந்திராவால் அரன்மனைக்குள் கொலைச் செய்யப்பட்டாகள். இளவரசர் தன்னைதானே சுட்டக் காயங்கள் காரணமாக கோமா நிலைக்கு தாள்ளப்பட்டார்.
- யூன் 2 முடிக்குறிய இளவரசன் தீபேந்திரா கோமா நிலையில் இருக்கும் போதெ அரசராக அறிவிக்கப்படுகிறார். தீபேந்திராவின் சகோதரனான கயனேந்திரா தட்கால அரசராக நியமிக்கப்பட்டார்.
- யூன் 4 தீபேந்திரா இறந்தார், கயனேந்திரா மன்னராக அறீவிக்கப்பட்டார். கயனேந்திராவுக்கு எதிரான ஆர்பாட்டங்கள் கத்மந்துவில் இடம்பெற்றதன் காரணமாக ஊரடங்குச்சட்டம் பிரப்பிக்கப் பட்டது.
- யூலை மாவோயிசவாதிகள் தமது போராட்டங்களை அதிகரித்தனர். பிரதமர் கிரிசா பிரசாத் கொய்ராலா பதிவி விலகினார்.
- யூலை சேர் பகதூர் தெவுபா புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார். அவர் போராளிகளுடன் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
- ஆகஸ்டு 30 அரசு, போராளிகள் சமதான பேச்சுவர்த்தையை ஆரம்பித்தனர், போராளிகள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தமது கோரிக்கஒயாக முன்வைத்தனர்.
- நவம்பர் மாவோயிசவாதிகள், 4 மாத போர் நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 15 இடங்களில் நடத்திய தாக்குதல்கள் காரணமாக 24 காவல் துறையினர் கொல்லப்பட்டனர்
- நவம்பர் 26 கயனேந்திரா மன்னர் அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.