நொடி (கால அளவு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நொடி (அல்லது வினாடி) என்பது காலத்தை அளவிடப் பயன்படும் அடிப்படை அலகு. 60 நொடிகள் = 1 நிமிடம் (மணித்துளி). நொடி என்பது அனைத்துலக முறை அலகில் second (செக்கன்) என்னும் பெயரால் குறிப்பிடப்படுகின்றது. ஆங்கில எழுத்துக் குறியீடு s என்பதாகும். தமிழில் நொ (அல்லது) செக் என்று சுருக்கமாகக் குறிக்கப்படும்.
ஒரு நொடி என்பது துல்லியமான நிலைநாட்டலின் படி கீழ்க்காணுமாறு குறிப்பிடப்படும். சீசியம்-133 என்னும் அணு, தன் அடி நிலையில் இருக்கும் பொழுது அதன் அணுக்கருவில் உள்ள காந்தப்புலனின் விளைவால் நிகழும் மிகநுண் ஆற்றல் வேறுபாடுகளின் அடிப்படையில் ஒரு நொடி என்பது விளக்கபடுகின்றது. ஒரு நொடி என்பது அசையாது 0 K (கெல்வின்) வெப்பநிலையில் இருக்கும் ஒரு சீசியம்-133அணுவின் அடி நிலையில் உள்ள இரு வேறு மிக நுண்ணிய ஆற்றல் இடைவெளிகளுக்கிடையே நிகழும் 192 631 770 அலைவுகளின் கால அளவு ஆகும்.