பேச்சு:பண்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மதிப்புடன் தங்கள் முயற்சிக்கு நன்றியும் வாழத்துக்களும். தமிழில் பண்பாட்டியல் என்ற சொல்லும் பண்பாட்டு மானிடவியல் என்ற சொல்லும் புழக்கத்தில் வந்து வெகு நாட்களாகிறது. இப்படியாக புதிய பதிய சொற்களை தேவையற்றுக் கொண்டுவருவது தமிழின் ஊடான வளரச்சிக்கு உதவாது. தயையுடன் கருத்தில் கொள்க.
[தொகு] பரிந்துரை தேவை
- wikt:ta:popular culture பொதுப் பண்ணொய்யாரம் (கருத்தளவிலே popular culture, pop culture என்பது பொது மக்கள் கொண்டாடும் கலை, பண்பாடு பற்றிய தற்கால ஈடுபாடுகள் எனலாம். குறிப்பாக இளைஞர்கள் விரும்பி ஈடுபாடு காட்டும் பாடல், நடை உடை பாவனைகள், கலைநுட்பப் போக்குகள் முதலிவற்றைக் குறிக்கும். ஒய்யாரம் என்றாலே கலை, அழகு முதலியவற்றின் முன்னோட்ட வீச்சைக் குறிக்கும். பொதுமக்கள்+கலை, பண்பாடு + ஒய்யாரம் என்பதை எவ்வாறேனும் குறிப்பதாக சுருக்க வேண்டும். எனவே இப்போதைக்குப் பொதுப் பண்ணொய்யாரம், அல்லது பொதுப் பண்ணோச்சம் (பண் + ஓச்சம்), அல்லது பொதுக் கலையோச்சம் என்று கூறலாம். ஓச்சம் என்றால் சிறப்பான உயர்வு.
-
- நீங்கள் people culture என்று பொருள் கொள்வதாக தெரிகின்றாது. பொது என்பது - common எனபதையே சிறப்பாக சுட்டும். culture என்றால் பண்பாடு என்ற சொல்லை பரவலாக பயன்படுத்துகின்றோம்.
Popular culture என்பதில் பொதுமக்கள் பரவலாக கைக்கொள்ளும் கலை-பண்பாட்டு பழக்க வழக்கங்களும் ஈடுபாடுகளையும் குறிக்கும். எனவே People culture என்று சொல்வது பொருந்தும். எளிய மொழி பெயர்ப்பு வேண்டும் எனில் பொதுமக்கள் பண்பாடு = பொதுப் பண்பாடு என்றே கொள்ளலாம். ஆனால் pop culture என்று சொல்வதிலே இளைஞர்களோ முதியவர்களோ தம்காலத்தில் அல்லது தற்காலத்தில் புதுத் தூக்கலாக மிகு வீச்சுடன் உள்ளதாக உணரப்படும் கலை, பண்பாட்டு ஈடுபாடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடும். பண்பாடு என்பது காலத்தால், வழிவழியாய் வந்த பல்லோர் துணையால் சிறப்பேறி நுட்பேறி பண்பட்ட கலைச் சிறப்பான வெளிப்பாடு. popular culture என்பதில் சிலவோ பலவோ அப்படி பிற்காலத்தில் பண்பட்ட கலை-பண்பாடாகக் கருதப்படலாம்.பண்பாடு என்பதற்குச் சரியான ஆங்கில்ச்சொல் இல்லை, அதே போல culture என்பதற்கும் இணையான தமிழ்ச்சொல் இல்லை (கலை, பண்பாடு என்பது சற்றேறக்குறைய பொருந்தும்). எனவே நான் பரிந்துரைத்ததில் பண்பாடு என்பதை ஒருவாறு தவிர்த்துள்ளேன். பொது என்பது common, common people, general public, public ஆகியவற்றுக்கு இணையாகப் பல இடங்களில் பயனடுத்த இயலும்.--C.R.Selvakumar 00:35, 28 செப்டெம்பர் 2006 (UTC)
-
- culture (பண்பாடு), mass culture (பெருந்தொகை பண்பாடு?), pop culture, high culture (மேல்வர்க்க பண்பாடு), counter culture (மறைநிலை பண்பாடுகள்??), multiculture (பன்முக பண்பாடு), "primative" culture, folk culture (நாட்டார் பண்பாடு) போன்ற கருத்துக்களை வேறுபடுத்தி காட்டவேண்டும். பொது என்ற சொல்லில் POPULAR என்ற கருத்துரு வருகின்றதா? தற்சமயம் ஏதாவது வழக்கில் இருக்கின்றதா?
பரவலர் பண்பாடு (= popular culture) என்றும் சொல்லலாம். counter culture என்பதற்கு எதிர்ப் பண்பாடு, எதிர்முரண் பண்பாடு எனலாம். folk culture என்பதை நாட்டார் பண்பாடு எனலாம், நாட்டுப்புறப் பண்பாடு எனலாம். multiculture என்பது பல்லினப்பண்பாடு எனலாம். popular என்னும் சொல் population, பொதுமக்கள், மக்கள் என்பதோடு தொடர்புடையதே.--C.R.Selvakumar 00:35, 28 செப்டெம்பர் 2006 (UTC)
-
- கருத்துக்களுக்கு நன்றி. --Natkeeran 00:56, 28 செப்டெம்பர் 2006 (UTC)
[தொகு] பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம்.
விளக்கம் தேவை?--Natkeeran 07:35, 6 டிசம்பர் 2006 (UTC)
[தொகு] இன்னுமொரு வரையறை...
பண்பாடு பண்பு படுத்தப்பட்ட அல்ல பண்பட்ட அல்லது திருத்தங்களுக்கு உள்ளாகிய ஒரு சமூகத்தின் வழக்கங்களை குறிக்கும். பண்பாடு என்றும் திருத்தங்களுக்கும் மாற்றத்துக்கும் உட்பட்டே நிற்கின்றது. --Natkeeran 07:37, 6 டிசம்பர் 2006 (UTC)
"பண்பாடு என்ற சொல் விரிந்த பொருளுடையது. பல அறிஞர்கள் இதற்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கி செழுமைப்படுத்தியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஒரே சூழலில் தொடர்ந்து வாழ்ந்ததின் விளைவாய் கற்றுக்கொண்ட மொழி, கலை, இலக்கியம், அறிவு, சிந்திக்கும் முறை, பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்தும் பண்பாடு என்கின்றனர். உணவு, உடை, திருமணம் செய்கிற முறை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்கு, விருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு போன்றவையும் இவற்றில் அடங்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பண்பாட்டின் வரையறைக்குள் வராத எதுவும் வாழ்வில் இல்லையென்று கூறலாம்." http://keetru.com/kathaisolli/feb07/mukil.html