பனித்தூவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பனித்தூவி என்பது மழை பெய்வது போல, குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வகைகளில் உருவாவதைக் காணலாம்.
உயர்ந்த மலைகளில் உயரம் கூடக் கூட வெப்பநிலை தணிவதால் அங்கெல்லாம் பனித்தூவி விழுவதைப் பார்க்கலாம். நிலநடுக் கோடு இருக்கும் வெப்ப மண்டலங்களிலும் உள்ள மிக உயர்ந்த மலைகளில் நிலையாக பனித்தூவி விழுந்து பனி மூடியிருக்கும். ஆப்பிரிக்காவில் டான்சானியாவில் இருக்கும் கிளிமஞ்சாரோ தனிமலையில் வெண் பனி மூடியிருப்பதைக் காணலாம். கிளிமஞ்சாரோவின் உயரம் 5,895 மீட்டர் ஆகும். சுமார் 5,300 மீட்டர் உயரத்திலேயே வெண்பனி இருக்கும். இமயமலைத் தொடரில் எப்பொழுதும் வெண் பனி மூடியிருப்பதைப் பார்க்கலாம். அங்கே 8,000 மீட்டருக்கும் அதிகமான உயரம் உள்ள மலைகள் பல. நிலவுலகின் வடமுனையிலும் (ஆர்ட்டிக்), தென்முனையிலும் (அண்ட்டார்டிக்) பல இடங்களில் குளிராக இருந்தும் பனித்தூவி விழுவதில்லை (குளிர்ந்த காற்று ஈரப்பதத்தை மேகங்களுக்கு கொண்டு சேர்ப்பதில்லை). அங்கு உள்ள பனி உருகாததால் அவை எப்பொழுதும் உறைந்த பனிக்கடலாக உள்ளது.
[தொகு] பனித் தூவியின் பல பெயர்களும் பரு வடிவங்களும்
பனித்தூவி பல நேரங்களில் பல வகையாக. சில சமையம் வென் நுரை போல் இருப்பதால் நுரைபனி என்றும், குறுமணல் போல் உருண்டோடுவதால், மணல் பனி என்றும், அள்ளி அமுக்கினால் இறுகுவதால் இறுகுபனி அல்லது சொருகுபனி என்றும் பனித்தூவிக்குப் பல பெயர்கள் வழங்கப்படும்.