பாகைத்துளி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாகைத்துளி என்பது ஒரு சிறு கோணத்தைக் குறிக்கும் அளவு. பாகைத்துளி என்பது வடிவவியலில் ஒரு வட்டத்தின் ஒரு பாகையின் 60ல் ஒரு பங்கு ஆகும். ஒரு பாகை என்பது வட்டத்தின் சுற்றளவில் (பரிதியில்) 360ல் ஒரு பங்கான பகுதி வட்டத்தின் நடுவில் வடிக்கும் கோணம். எனவே ஒரு பாகைத்துளி என்பது ஒரு வட்டத்தின் முழு சுற்றளவில் 1/21600 ல் பகுதியின் கோணம். இவ்வகை சிறு கோணங்கள் வானவியலில் தொலைவில் உள்ள விண்மீன்கள் பற்றிய அளவீடுகளுக்கு மிகவும் பயன்படுவது. பாகைத்துளியின் SI அளவீட்டுக் குறி ஒரு சாய்கொட்டு (′) (U+2032, ′), அனால் சாதாரண ஒற்றைக் கொட்டு அல்லது ஒற்றை மேற்கோள் குறியும் (') (U+0027) பயன்படுத்துவதுண்டு. ஐந்து பாகைத்துளி என்பதை 5' என்று குறிப்பர். பாகைத்துளியை சாய்கொட்டுக்கு மேல் ஒரு கூரைக் குறி இட்டும் காட்டுவர் ()
பாகைத்துளியின் உட்கூறுகளை பாகைநொடி என்பர். 60 பாகைநொடிகள் சேர்ந்தது ஒரு பாகைத்துளி. பாகைநொடியைக் குறிக்க இரட்டை சாய்கோடுகள் இடுவர் ( ″ ) (U+2033).
[தொகு] நில வரைபடவியல்
நில வரைபடவியலில் பாகைத்துளி பயன்படுகின்றது. நில உருண்டை ஒரு முழுச்சீரான உருண்டை இல்லை எனினும், கடல் மட்டத்தில் நில நடுக்கோட்டை வட்டமாகக் கொண்டாலொரு பாகைத்துளி என்பது சுமார் 1.86 கிலோ மீட்டர் (1.15 மைல்). இதனையே சற்றேரக்குறைய 1 நாட்டிக்கல் மைல்(கடலோட்ட மைல்) ஆகும்.