பேச்சு:பாடல் பெற்ற தலங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இப்பகுப்புக்குள் அடங்கும் கோயில்கள் தொடர்பான விபரங்களை ஒரு சிறு நினைவு நூலிலிருந்தே பெற்றேன். தலங்களின் பெயர்களில் எழுத்துப் பிழைகள் இருப்பின் பொருத்தமான மாற்றங்கள் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு பாடல் பெற்ற தலங்களில் பாடப்பெற்ற தேவாரப் பதிகங்கள் எவை என்பது தொடர்பான விபரங்கள் அவசியம் இணைக்கப்பட வேண்டும். பின்னர் விக்கிமூலத்தில் குறித்த பதிகங்கள் சேர்க்கப்படும்போது அவற்றுக்கான இணைப்பைக் கொடுத்தல் வேண்டும். கோயில்கள் தொடர்பான குறுங்கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கவுள்ளேன். கோபி 11:34, 12 ஆகஸ்ட் 2006 (UTC)
- கோபி, பாடல் பெற்ற தலமென்றால், தேவாரத்தில் அத்தலம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமா அல்லது சமயக்குரவர்களே அக்கோயிலுக்குச் சென்று அப்பாடலை பாடியிருக்க வேண்டுமா? இலங்கையில் உள்ள கோயில்களும் பாடல்கள் பெற்றிருப்பதால் இந்த ஐயம்.--ரவி 12:26, 30 செப்டெம்பர் 2006 (UTC)
குறித்த தலத்தின் மீது பாடல் பாடப்பட்டிருப்பின் அது பாடல் பெற்ற தலம்தான். பெரும்பாலும் பாடல்களில் தலப்பெயர் இருப்பதை அவதானிக்கலாம். --கோபி 13:11, 30 செப்டெம்பர் 2006 (UTC)