புனே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புனே இந்திய நாட்டின் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் முன்பு புனாவாடி எனவும் பூனா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. பிம்பிரி-சிஞ்ச்வாத் ஆகியன இதனருகில் உள்ள இரட்டை நகரங்கள் ஆகும். புனே மகாராஷ்டிர மாநிலத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அழைக்கப்படுகிறது.