புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பானது (IOM) 1951 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரினால் குடிபெயந்த மக்களை குடியமர்த்துவதற்காக ஏற்படுத்தப் பட்ட அமைப்பாகும். இன்று அதன் இலக்குளானது விரிவுபடுத்தப் பட்டு உலகளாவிய ரீதியாக இடம் பெயர்ந்தவர்களுக்கு உதவும் அமைப்பாகும். இது ஐக்கிய நாடுகள் அமைப்பல்லவெனினும் பல்வேறு ஐக்கிய நாடுகள் அமைப்புகளுடன் சேர்ந்தியங்கி வருவதுடன் ஐக்கிய நாடுகளின் அந்தஸ்தை உடையது.
[தொகு] இலங்கையில் இதன் பணி
1990 களில் இலங்கை இதன் ஓர் அங்கத்துவ நாடாகியது. 90களில் வளைகுடாப் போரில் 95, 000 பேரை மீளவும் இலங்கைக்கு வருவிப்பதில் பங்காற்றியது. இதன் அலுவலகம் கொழும்பில் மே 2002 இல் ஆரம்பிக்கப் பட்டது. சுனாமியை அடுத்து இடைத்தங்கல் வீடுகள், சுகாதார சம்பந்தமான உதவிகள், போக்குவரத்து வசதிகளையும் செய்து கொடுப்பதில் அளப்பரிய பங்காற்றியது.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு (ஆங்கிலத்தில்)
- இலங்கைப் புலம்பெயர்தல் தொடர்பான சர்வதேச அமைப்பு (ஆங்கிலத்தில்)