பூர்ஜ் அல் அராப்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூர்ஜ் அல் அராப் என்பது ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஒரு ஆடம்பர விடுதி (luxury hotel). 321 மீட்டர் (1053 அடி) உயரமுள்ள இக் கட்டிடம், விடுதியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்ற கட்டிடங்களில் உலகிலேயே மிகவும் உயரமான கட்டிடமாகும். கடற்கரையிலிருந்து 280 மீட்டர் தொலைவில், பாரசீக வளைகுடாவில் அமைக்கப்பட்ட செயற்கைத் தீவொன்றில் இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இவ்விடுதிக்குச் செல்வதற்கெனவே கட்டப்பட்ட பாலம் ஒன்று இத் தீவைத் தலைநிலத்துடன் இணைக்கின்றது. துபாய் நகரத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உலக அளவில் அறியப்பட்ட கட்டிடமாக இது திகழ்கின்றது.
இக்கட்டிடத்தின் கட்டுமான வேலை 1994 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இக்கட்டிடம், ஒருவகை அராபியப் பாய்க்கப்பல் ஒன்றின் பாய்மரத்தை ஒத்திருக்கும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- பூர்ஜ் துபாய்
- பாம் தீவுகள்
- த வேர்ல்ட் (தீவுக்கூட்டம்)
[தொகு] வெளியிணைப்புக்கள்
- அதிகாரபூர்வ இணையத்தளம் (ஆங்கிலத்தில்)
- பூர்ஜ் அல் அராபின் உலங்குவானூர்தி இறங்குதளத்தில் டென்னிஸ் விளையாட்டு (ஆங்கிலத்தில்)
- பூர்ஜ் அல் அராப் பற்றிய ஒரு கட்டுரை (ஆங்கிலத்தில்)
- கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் பூர்ஜ் அல் அராப் (ஆங்கிலத்தில்)
- 3D Model of Burj Al-Arab for Google Earth