பேச்சு:பொங்கல் (திருநாள்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொங்கல் இந்துப் பண்டிகை என்று பிரதானமாக அடையாளப்படுத்துவது அவ்வளவு பொருத்தமில்லை என்று நினைக்கின்றேன். --Natkeeran 01:05, 8 ஜனவரி 2007 (UTC)
-
- பொதுவாக இந்துப் பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறதெனினும் ஒரு தமிழர் பண்டிகையாகவே அண்மைக்காலங்களில் பார்க்கப்படுகிறது. கொழும்பில் தமிழர் அதிகம் வாழும் பகுதிக் கிறித்தவத் தேவாலயத்திலும் பொங்கப்படுவதைக் கண்டுவருகிறேன். ஆதலால் இந்துப் பண்டிகைகள் வார்ப்புருவை நீக்கப் பரிந்துரைக்கிறேன். --கலாநிதி 17:11, 8 ஜனவரி 2007 (UTC)
-
- கலாநிதியின் கருத்துடன் உடன் படுகின்றேன். --Natkeeran 17:13, 8 ஜனவரி 2007 (UTC)
நற்கீரன், மேலே கருத்துத் தெரிவித்தது கலாநிதியல்ல. கோபிதான். எப்படிக் கலாநிதியின் பெயரில் கருத்துப் பதிவாகியதென்று விளங்கவில்லை. --கோபி 17:15, 8 ஜனவரி 2007 (UTC)
உங்கள் அனைவரதும் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். இக்கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள், பொங்கல் கொண்டாடப்படும் முறை என்பன சைவ சமயத்தவர்களால் அநுட்டிக்கப்படும் முறைகளையே குறிக்கிறது. (இந்து வார்ப்புரு இங்கு இருப்பதில் எந்தத் தவறும் இல்லை எனவே எனக்குப் படுகிறது). இக்கட்டுரையில் டெரென்ஸ் தந்த செய்திகளையும் இணைப்பது நல்லது. இலங்கையில் சில பொது அமைப்புகள் ஆங்காங்கே பொங்கல் விழாக்களை நடத்துகின்றன. அத்துடன் பொங்கல் விழா சங்கிராந்தி, மகர சங்கிராந்தி என்ற பெயரில் இதே நாளில் இந்துக்களால் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. (ஆனால் இது இந்துக்கள் அல்லாதவர்களாலும் அந்தந்த ஊர்களில் கொண்டாடப்படுகிறதா என்பது தெரியவில்லை). இத்தகவல்களுக்கு தனியான பக்கங்கள் தொடங்கலாம்.--Kanags 22:22, 8 ஜனவரி 2007 (UTC)
- பொங்கல் இந்து பண்டிகை என்று கூறுவது பொருந்தாது. இவ்விழா மதம் சாரா பொதுமக்கள் திருவிழா. கதிரவனைக் கொண்டாடும் (மழை, உயிரினங்கள் அனைத்தையும் நினைத்து, நன்றி கூறும் விதமாக அமைந்தது) விழா. தமிழர்கள் திருநாளாக சிறப்பாகக் கொண்டாடப்படும் பொதுமக்கள் அனைவரும் கொண்டாடும் விழா. தைமாதம் பிறப்பு விழா என்றும் சொல்லலாம், எனினும், மதம்-சாரா கொண்டாட்டத்திருவிழா. இந்துக்கள் தங்கள் முறைப்படி வழிபாடுகள் செய்தாலும், அடிப்படை அனைத்தும் மதம் சாராதவை. அடுத்ததாக, திருவள்ளுவர் நாளையும் விளக்கங்களுள் சேர்த்தல் வேண்டும். இது எப்பொழுதிலிருந்து திருவள்ளுவர் நாளாகக் கொண்டாடுகிறோM என்பதனையும் சொல்லுதல் வேண்டும். --செல்வா 22:58, 8 ஜனவரி 2007 (UTC)
- வணக்கம் செல்வா, பொங்கல் தமிழர் பண்டிகை என்பதை அடையாளப்படுத்துவதே சரியானது. இந்த வார்ப்புருவை உருவாக்க ஆரம்பிக்கும் போது சைவசமயப் விழாக்களை உள்ளிடுவதற்காகவே ஆரம்பித்தேன். ஆனால் அநேகமான எமது சமய விழாக்கள் மற்ற இந்துக்களாலும் கொண்டாடப்பட்டுவருகின்றன. எனவே பொதுவில் இந்துப் பண்டிகைகளாக உருவாக்கிவிட்டேன். இந்த வார்ப்புருவின் பெயரை பொதுவில் பண்டிகைகள் (இந்து நாட்காட்டியில்) என்று மாற்றிவிடலாமா?--Kanags 23:14, 8 ஜனவரி 2007 (UTC)
-
- கனக்ஸ், பெயரை மாற்றினால் பிற சமய பட்டிகைகளையும் உள்ளடக்க வேண்டி வரும். எ.கா. கிறிஸ்துமஸ். அது நீங்கள் வார்ப்புருவை உருவாக்கியதற்கான நோக்குகல்ல என்று நினைக்கின்றேன். --Natkeeran 01:11, 9 ஜனவரி 2007 (UTC)
நற்கீரன், வார்ப்புருவின் பெயரை மாற்றத் தேவையில்லை. அப்படியே இருக்கட்டும். (அநேகமான வார்ப்புருக்கள் ஆங்கிலப்பெயர்களிலேயே அமைந்துள்ளதைக் கவனியுங்கள்). பக்கங்களில் அது எப்படிக் காட்டப்படுகிறது என்பதே முக்கியம். வார்ப்புருவைப் பாருங்கள். அங்கு தேவையான மாற்றத்தைச் செய்துள்ளேன். இப்போதுள்ள் வார்ப்புருவில் மற்றைய சமய விழாக்கள் சேர்க்கப்படத் தேவையில்லை. அதற்கேற்ப தலைப்பை மாற்றியுள்ளேன். பெயரையும் மாற்றவேண்டுமானால் வழிமாற்றலாம்.--Kanags 01:50, 9 ஜனவரி 2007 (UTC)
-
- ஓம் என்று இருந்தால் பரவாயில்லையா..!--Natkeeran 01:56, 9 ஜனவரி 2007 (UTC)
ஓம்:).--Kanags
ஓம் ஓம் --கலாநிதி 16:42, 9 ஜனவரி 2007 (UTC)