பொன்னையாபிள்ளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொன்னையாபிள்ளை (1888 - 1945) பந்தணை நல்லூரில் பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இசைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது தொடக்கத்திலேயே இசை ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1941 - 1942 காலத்தில் எழுதிய பாடல்கள் தமிழிசைக் கருவூலம் என்ற பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. இசை இயல் என்ற இசை இலக்கண நூலையும் எழுதினார்.