பொ. ரகுபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொ. ரகுபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், மானுடவியல், சமூகவியல், தமிழ் போன்ற துறைகளில் கற்பித்து வருகிறார். இதற்கு முன்பு ஒரிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தென்னாசியவியலில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவரின் ஆய்வுத்துறைகள்: தென்னாசிய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், பண்பாட்டியல், தமிழியல், சோதிடம். ஆங்கிலத்திலும் தமிழிலும் 15 நுìல்கள் எழுதியுள்ளார். Early settlements in Jaffna என்ற ஆய்வு நுìல், தென்னாசியத் தொல்லியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.