மன்னவன் கந்தப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தமிழ்க் கவிதையுலகில் மன்னவன் கந்தப்பு ( கரவெட்டி, யாழ்ப்பாணம் இ: 15.02.2004) என அழைக்கப்பட்ட பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியரான முருகேசு கந்தப்பு, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் மாணவர்களுள் ஒருவர். அத்துடன், பண்டிதமணியினால் 'மன்னவன்' என அழைக்கப்பட்டிருந்தார். இலங்கை வானொலி மற்றும் பத்திரிகை நிறுவனங்களினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்கள் பெற்ற இவர், சிறந்த நகைச்சுவைப் பேச்சாளரும்கூட. முற்போக்குச் சிந்தனையாளரான இவர் அதிபராகக் கடமை யாற்றி ஓய்வுபெற்றவர். வடமராட்சியில் கம்பன் கழகம் நிறுவுவதற்குக் காரணமாக இருந்தவர்களுள் இவரும் ஒருவர்.