மாறவர்மன் வீரபாண்டியன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாறவர்மன் வீரபாண்டியன் பாண்டிய மன்னர்களின் ஆட்சித் துணைவனாக இருந்தவனாவான். தென்னார்க்காடு, சிதம்பரம், எறும்பூர், திருவயீந்திரபுரம் ஆகிய ஊர்களில் இவனைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுக்களைக் காணலாம். மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்தில் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றான்.