முதல் இந்திய விடுதலைப் போர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவின் விடுதலைக்கான எழுச்சிகளில் வரலாற்று முதன்மையில் இன்றியமையாதன:
- ஜூலை 10, 1806ல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சி. திப்பு சுல்தான் 1799ல் இறந்த பின்னர் ஆங்கிலேயர்கள் திப்புசுல்தானின் குடும்பத்தாரை வேலூர் கோட்டையில் சிறை வைத்திருந்தனர். அங்கே, சீராடை பற்றிய புதிய சட்டத்தை எதிர்த்தவர்களை ஆங்கிலேயர் தண்டித்ததை அடுத்து ஒரு திட்டமிட்ட எழுச்சி நடந்தது. இதில் அங்கிருந்த 350 ஐரோப்பியரில் 100 பேர் கொல்லப்பட்டனர். இதுவே முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சி எனப்படுகின்றது. இதன் 200 ஆவது ஆண்டு நினைவாக இந்திய அஞ்சலகம் ஒரு நினைவு அஞ்சல் தலையை சூலை 10, 2006 வெளியிட்டுள்ளது.
- ஜனவரி-மே, 1857ல் நிகழ்ந்த இந்திய விடுதலை எழுச்சி பரவலாக இந்தியாவின் முதல் விடுதலைப்போர் என கூறப்படுகின்றது. இதனை மேற்குலகு நாடுகளில் பலவும் இந்திய சிப்பாய் கலகம் எனக் கூறினும், இந்தியர்களில் பலரும் இதனைத்தான் முதல் இந்திய விடுதலைக்கான எழுச்சியாக நினைக்கின்றனர். பலரும் 1806ல் நிகழ்ந்ததை அண்மைக்காலம் வரையிலும் சிறப்பாகக் குறிப்பிடவில்லை.