மைசூர் வாசுதேவச்சாரியார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
வாசுதேவாசாரியார், சுப்பிரமணியாச் சாரியாரின் ஏகபுத்திரனாக கோயம்புத்தூர் ஜில்லாவிலுள்ள "செவ்வூர்" எனும் கிராமத்தில் அவதரித்தார். இவர் முதலில் சமஸ்கிருதம் கற்றார். அதன் பின் இசையைக் கற்க முற்பட்டார். பட்டினம் சுப்பிரமணி ஐயரின் சிஷ்யராக இருந்து ஒரு சிறந்த சங்கீத வித்துவானாகவும் வாக்கேயகாரராகவும் விளங்கினார். இவரது சாரீரமானது அனுமந்த்ர ஸ்தாயி பஞ்சமத்திலிருந்து தாரஸ்தாயி கந்தாரம் வரை சுலபமாக பாடும் திறனுடையது.
[தொகு] இசைப்பணி
இவரது உருப்படிகளாலேயே இவரின் புகழ் பிரசித்தமாயுள்ளன. அவற்றிற்கு உதாரணமாக "ப்ரோச்சேவ ரெவருரா" என்ற கமாஸ் ராக உருப்படியைக் கூறலாம். இவரது இறுதிக் காலத்தை அடையாரில் உள்ள கலாகக்ஷேத்ராவில் கழித்தார். இது மட்டுமன்றி இந்த ஸ்தாபனத்தின் உபதலைவராக இருந்து "சீதா கல்யாணம்" என்ற நாட்டிய நாடகத்திற்கு இசையமைத்தார். இவர் கவிஞர்கள் வாழ்க்கை வரலாறு, கீர்த்தனைகள், இராகமாலிகைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டர். சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, முதலிய பாஷைகளில் அனேக கீர்த்தனங்களைச் செய்து அச்சிட்டு பிரசித்தப்படுத்தினார். இவர் தமது காலத்தில் வாழ்ந்த ஏனைய இசைப்பாடகர்களை எல்லாம் தமது இசை வன்மையால் வச்சுரித்து நேயத்துடன் வாழச்செய்தார். 60 வருட காலமாக தென்னாட்டிலே இவரின் இசை பிரகாசித்ததுடன் பல அரசர்களாலும், மாடாதிபதிகளாலும் போற்றப்பட்டார்.
[தொகு] பட்டங்களும் முத்திரையும்
இவருக்கு "மைசூர் ஆஸ்தான சங்கீத சாஸ்திர ரத்தினம்", "சங்கீத சாஸ்திர விஸாரத", "சரஸகான சிரோன்மணி" என்னும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பலர் இவரிடம் சிஷ்யராக சேர்ந்து இசை பயின்றனர். இவரது முத்திரை "வாசுதேவ" என்பதாகும். இவர் இளம் வித்வான்களை உருவாக்கித் தந்து இறைவனடி சேர்ந்தார்.