மொத்த தேசிய உற்பத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொத்த தேசிய உற்பத்தி (மொ.தே.உ.) என்பது ஒரு முக்கிய பொருளாதார அளவுகோல் ஆகும். மொ.தே.உ. ஆனது ஒரு நாட்டின் ஆட்சி எல்லைக்குள் குறிப்பிட்ட காலப்பகுதியில் உற்பத்தி செய்த பொருட்களினதும் சேவைகளினதும் சந்தைப்பெறுமதியாகும்.
- மொ.தே.உ = நுகர்வு + முதலீடு + அரச செலவீனம் + ஏற்றுமதி − இறக்குமதி