ரசம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புளியை நீரில் கரைத்து, உப்பு மற்றும் ரசப்பொடி சேர்த்து, கொதிக்க வைத்த உணவுப்பொருள் புளி ரசம் எனப்படும். இது தமிழகத்தில் பிரபலம். பொதுவாக தமிழரின் மதிய உணவில் சாதத்துடன் முதலில் குழம்பு, பிறகு ரசம், கடைசியில் தயிர் என்ற வரிசையில் பரிமாறப்படும்.
பழ ரசம் என்பது இதிலிருந்து வேறுபட்டதாகும்.
[தொகு] ரச வகைகள்
பல தமிழ் சாதியினருக்கு ஒரு வகை ரசத்தை மட்டுமே தெறிகிறது. இது புளி, தனியாப்பொடி, பூண்டு மூன்றும் கலந்த ரசம். பிராமணர்கள் , சமணர் பொதுவாக பூண்டு கலப்பதில்லை.
எனக்கு தெரிந்த ரச வகைகள் மிளகு ரசம், சீரக ரசம், பருப்பு ரசம், பருப்புருண்டை ரசம், மைசூர் ரசம்(தேங்காய் அல்லது கொப்பரை அறைத்து), திப்பிலி ரசம், எலுமிச்சை ரசம், அண்ணச்சிப் பழ புளி ரசம், தக்காளி ரசம் (குரைவான் புளியுடன்), வேப்பம்பூ ரசம், அள்ளி பருப்பு ரசம் (முக்கால் வெந்த பருப்பு இருக்கும்)
உணவிலும் சாதி பேசுவது இதை படிக்கும் பலருக்கு பிடிக்காமலிருக்கலாம். சாதிகள் ஒழிவது போல் தெரியவில்லை. ஒரு சிறுபான்மையின் போலித்தனமான கூக்குரலாகவே தெறிகிறது. சாதிக்கு சாதி பல உணவு வகைகள் வேறுபடுவது மறுக்க முடியா உண்மை. இந்த கட்டுறை சாதி மோகத்தினால் எழுத்தபடவில்லை, உணவு மோகத்தால் எழுதப்பட்டது.
[தொகு] மற்ற பெயர்கள்
சாற்றும் அமுது என்றும் ரசத்துக்கு ஒரு பெயருண்டு. சுருக்கமாக் சாத்துமது என சொல்வார்.
[தொகு] ஈயப்பாத்திரம்
ஈயப்பாத்திரத்தில் சமைத்த ரசம் அதிக சுவையாக இருக்கும். சமைக்கும் பொழுதே அதிகமா மணக்கும்.