ரஷ்யப் புரட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரஷ்யப் புரட்சி எனப்படுவது 20ம் நூற்றாண்டில் ரஷ்ய சாம்ராச்சியத்தில் இடம்பெற்ற பல புரட்சிகளைக் குறிப்பிடுகிறது. இப்புரட்சிகள் உலக வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை ஆகும்.
[தொகு] 1905 புரட்சி
1905 ஆம் ஆண்டில் தொழிலாளர்களும் மாணவர்களும் ஜார் மன்னனின் அரண்மனைக்கு ஒரு மனு கொடுக்கச் சென்றபோது, அவர்கள் கோசாக் குதிரைவீரர்களால் சுடப்பட்டு, புரட்சி வெடித்தது. அது கடைசியில் நசுக்கப்பட்டு ஜாரின் சர்வாதிகாரம் அதிகமாயிற்று.
[தொகு] பெப்ரவரி 1917 புரட்சி
1917, பெப்ரவரியில், முதல் உலகப் போரின் ஆள் அழிவுகளாலும், தோல்விகளாலும், முடக்கங்களினாலும் புரட்சியில் வெடித்தனர். இதனால் ஜார் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஜனநாயக குடியரசு பிரகடனம் செய்யப் பட்டது.
[தொகு] அக்டோபர் 1917 புரட்சி
முதன்மைக் கட்டுரை: அக்டோபர் புரட்சி
பெப்ரவரி புரட்சியினால் கட்டுடைந்த சமூக சக்திகள், புதிய அரசாங்கத்தின் மீது வெறுப்புக் கொண்டார்கள். இந்த வெறுப்புகளை பயன்படுத்தி, ரஷிய சமூக ஜனநாயக கட்சி (பெரும்பாலோர்), விளாடிமீர் லெனின் தலைமையில் 1917 அக்டோபரில் ஆட்சியை திடீரென்று கைப்பறினர். இது அக்டோபர் புரட்சி என்றழைக்கப்படுகிறது.