ராஜேஸ்வரி சண்முகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராஜேஸ்வரி சண்முகம் 1950 களில் இலங்கை வானொலியில் சானா சண்முகநாதன் நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது வானொலி நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
[தொகு] கலைக்குடும்பம்
இவரது கணவரான சி. சண்முகமும் இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிபரப்பான ஏராளமான தனி நாடகங்கள், தொடர் நாடகங்கள் என்பனவற்றை எழுதியவர். இவர்களது பிள்ளைகளான சந்திரமோகன், சந்திரகாந்தன் இருவருமே வானொலி அறிவிப்பாளர்களாக சமகாலத்தில் இருந்தவர்கள். மகள் வசந்தி வானொலி, மேடை நாடகங்களில் நடித்தவர்.